கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 50 வயது நிரம்பிய பெண்ணான இவர் அப்பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக வேலை பார்க்கும் அப்பெண்ணின் கணவர் நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ரேவதி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கவே, வீட்டு வாசல் கதவை மூடாமல் திறந்து வைத்து வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்துள்ளார். ரேவதி தனியாக இருப்பதை நோட்டமிட்ட அவர் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்துள்ளார். முன்பின் தெரியாத வாலிபர் ஒருவர் வீட்டில் நுழைவதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரேவதி அவரை வெளியேற கூறியிருக்கிறார். ஆனால் உள்ளே நுழைந்த அந்த வாலிபர் ரேவதியின் கையை பிடித்து இழுத்து கற்பழிக்க முயன்றார்.

அவரிடம் இருந்து ரேவதி தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனாலும் விடாமல் வலுக்கட்டாயமாக அந்த வாலிபர் ரேவதியை கற்பழித்தார். இதில் காயமடைந்த ரேவதி கூச்சல் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். சுதாரித்துக்கொண்ட வாலிபர் உடனடியாக அங்கிருந்து தப்பி விட்டார். இதையடுத்து அருகே இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ரேவதி கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் தப்பியோடிய வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிகாலையில் கோர விபத்து..! தனியார் பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..! 20 பேர் உடல் நசுங்கி பலி..!