பாஜக மாவட்ட தலைவருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில்  மாணவிக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாகை மாவட்டம் புத்தூரில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரி பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமானது. இந்த கல்லூரியில் மாணவர்கள், மாணவியர்கள் ஒருவருடன் ஒருவர் பேசக்கூடாது என்ற கண்டிப்பு உள்ளது. இந்தநிலையில் மாணவி ஒருவர் மாணவருடன் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த உடற்குறியியல் துறை பேராசிரியர் சதீஷ்(35) கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் 22 வயது மாணவியிடம் விசாரணை நடத்த தனது வீட்டிற்கு வரும்படி தொலைபேசி மூலம் மாணவியை அழைத்துள்ளார்.

அப்போது பாலியல் ரீதியாக மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் தனக்கு மாதவிலக்கு வலி இருப்பதாக சொல்லி அந்த மாணவி சமாளிக்கவே அதையும் மீறி அந்த ஆசிரியர் "பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா” என்று தனது வீட்டிற்கு அழைக்கிறார். அந்த மாணவி அந்த பேராசிரியரிடம் எவ்வளோ கெஞ்சி கேட்டும் விடாமல் மீண்டும் மீண்டும் வீட்டிற்கு வர சொல்லி வற்புறுத்துகிறார்.

சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்.. மனைவி கண்முன்னே பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை..!

அதிரடியாக கைது செய்த போலீஸ்

இந்த ஆடியோ சமூக வலை தளத்தில் பரவியதையடுத்து கல்லூரியை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாவட்ட தலைவரும், கல்லூரியின் தாளருமான கார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கார்த்திகேயன், உடற்கூறியியல் ஆசிரியர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மது போதையில் மாணவியிடம் அந்த ஆசிரியர் தவறாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார். தகவலறிந்த நாகை ஆட்சியர் அருண்தம்புராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசாவை விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். இந்த விசாரணையில் ஆடியோ பதிவு பேராசிரியர் சதீஷ் உடையது என தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட சமூகநலத் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நாகை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷை நேற்று மாலை கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்

பட்டப்பகலில் 17 வயது பள்ளி சிறுமி மீது ஆசிட் வீச்சு.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!