மாணவியை ஸ்கூல் மொட்டை மாடி அறையில் வைத்து பிரின்ஸ்பல் மகன் செய்த காரியம்... வெளியான பகீர் தகவல்

மாணவியை பள்ளிகூட மொட்டை மாடி அறைக்கு அழைத்துச் சென்று  பிரின்ஸ்பல் மகன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோர்களிடம் கூறியதை அடுத்து இந்த கொடூரம் வெளியாகியுள்ளது.


 

Princebal son arrested for raping 9-year-old girl in Hyderabad

மாணவியை பள்ளிகூட மொட்டை மாடி அறைக்கு அழைத்துச் சென்று  பிரின்ஸ்பல் மகன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோர்களிடம் கூறியதை அடுத்து இந்த கொடூரம் வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஆறு மாதக் குழந்தை முதல் 60 வயது  மூதாட்டிகள் வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர், இது போன்ற குற்றங்களை தடுக்க அரசும் காவல் துறையும்  எத்தனையோ சட்ட திட்டங்களை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இந்த வரிசையில் 9 வயது பள்ளிச் சிறுமியை அப்பள்ளியின் பிரின்ஸ்பல் மகன் பள்ளிக்கூட மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

Princebal son arrested for raping 9-year-old girl in Hyderabad

இதையும் படியுங்கள்: நள்ளிரவில் ரயில் நிலையம் வந்த பெண்.. நைசா பேசி அறையில் பூட்டி வைத்து வெறி தீர அனுபவித்த ரயிவே ஊழியர்கள்.

முழு விவரம் பின்வருமாறு:- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்  சந்தோஷ் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர், அப்பள்ளியில் படிக்கும்  மாணவிகளை பள்ளிக்கூட பிரின்ஸ்பல் மகன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். மாணவிகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுப்பது, பிஸ்கட் வாங்கி கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்ட அவர் மாணவிகளை பள்ளி மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: உடலை எரிக்க வேண்டாம் புதைச்சிக்கலாம்.. திடீரென முடிவை மாற்றிய கள்ளக் குறிச்சி மாணவி குடும்பத்தினர். காரணம்.??

இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் 9 வயது சிறுமியை பிரின்ஸ்பல் மகன் யாசிர் பள்ளிக்கூட மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அதில் உள்ள அறையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது, இதனையடுத்து அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறினார், அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இந்த சம்பவம் குறித்து சந்தோஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர், இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர், பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரின்ஸ்பல் மகன் யாசிரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Princebal son arrested for raping 9-year-old girl in Hyderabad

மேலும் இதே போல இன்னும் பல மாணவிகளை அவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. சமீபகாலமாக பள்ளிச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் பரவலாக அதிகரித்துள்ளன, இந்த ஆண்டு மார்ச் மாதம் உத்திர பிரதேசம் முசாபர்நகர் மாவட்டத்தில் இதே போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்தது, 71 வயதான பள்ளி பிரின்ஸ்பல் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios