உடலை எரிக்க வேண்டாம் புதைச்சிக்கலாம்.. திடீரென முடிவை மாற்றிய கள்ளக் குறிச்சி மாணவி குடும்பத்தினர். காரணம்.??
கள்ளக்குறிச்சி மாணவி உடலை தகனம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அவரது குடும்பத்தினர் உடலை புதைக்க முடிவு செய்துள்ளனர். தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை குறைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி உடலை தகனம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அவரது குடும்பத்தினர் உடலை புதைக்க முடிவு செய்துள்ளனர். தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை குறைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூரில் இயங்கிவரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த கடலூர் மாணவி கடந்த ஜூன் 12ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந் நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வந்தனர், இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பள்ளியை அடித்து, உடைத்து தீ வைத்து எரித்தனர். இது கலவரமாக மாறியது, 3 ஆயிரத்து 400 க்கும் அதிகமான பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில் பள்ளி தாளாளர் மற்றும் அதன் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளிக்கு சீல் வைக்கும் வரை தனது மகளின் மரணத்தில் முடிவு கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என அவரது பெற்றோர்கள் கூறிவந்தனர். மாணவி இறந்த 10 நாட்களுக்கும் மேலாக பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து வந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் 23 ஆம் தேதி (இன்று) மாலை 6 மணிக்குள் உடல் தகனம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் அவரது பெற்றோர்களிடம் இன்று உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.. நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி துடிதுடிக்க படுகொலை.. 2 பேர் ஐசியுவில்.!
மருத்துவ மனையில் இருந்து மாணவியின் உடல் கொண்டு வந்தபோது ஆம்புலன்ஸ் வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது, ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லை, ஏற்கனவே மாணவியின் உடல் இரண்டு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது, மற்புறம் இதுதொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. மாணவி மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன, என்னுடைய மாணவியை குடும்பம் , மத வழக்கப்படி உடலை தகனம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். அதற்காக ஏற்பாடுகள் அவரின் சொந்த கிராமத்தில், சுடுகாட்டில் நடந்து வந்தது.
விரகுகள் வாங்கி உடலை தகனம் செய்ய ஏற்பாட்டில் இன்று காலை செய்யப்பட்டது, ஆனால் திடீரென அவரது குடும்பத்தினர் உடலை புதைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இந்நிலையில் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு புதைப்பதற்கான குழி தோண்டும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மத வழக்கப்படி உடலை தகனம் செய்ய திட்டமிட்டிருந்தோம், ஆனால் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் நடந்த பிரேதபரிசோதனை திருப்தி இல்லாததால், உடலை புதைக்க முடிவு செய்திருக்கிறோம்.
இதையும் படியுங்கள்: உன் மகன் வேணுமா ? நிர்வாண வீடியோ காலில் சிக்கிய பெண்ணை கதற வைத்த கொடூரன் !
இரண்டாவது முறையாக செய்யப்பட்டுள்ள உடற்கூறு ஆய்வில் எங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை வைப்போம். இதற்காகவே உடலை புதைக்க முடிவு செய்திருக்கிறோம், ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.