கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் பலி; மருந்தகத்திற்கு சீல்
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பனைக்குளம் கிராமத்தில் கருவுற்றிருந்த பெண் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்ஸ்ரீ. ஜெய்ஸ்ரீ கருவுற்றிருந்த நிலையில் கடந்த 15ம் தேதி கருவை கலைக்கும் எண்ணத்தில் மருத்துவரை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அருகில் உள்ள மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரையை உட்கொண்டுள்ளார். இதன் பின்னர் ஜெய்ஸ்ரீயின் உடலில் உதிரப் போக்கு அதிகரித்துள்ளது.
அரசு பள்ளிகளை மேம்படுத்த நடிகர்கள் உதவ வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்
உதிரப்போக்கு நிற்காத நிலையில் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெய்ஸ்ரீ அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை தொடர்ந்து மோசமானதைத் தொடர்ந்து அவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எட்டுவழிச்சாலை, விமான நிலைய விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் - வானதி சீனிவாசன்
இருப்பினும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதில் கடந்த 17ம் தேதி அவர் உயிரிழந்தார். ஜெய்ஸ்ரீயின் மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டது தான் மரணத்திற்கு என்று உறுதி செய்து தனியார் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.