9 வருஷமாக கணவனால் கர்ப்பம் ஆகாத மனைவி கள்ளக்காதலனால் கர்ப்பம்..! இறுதியில் நடந்த பகீர் சம்பவம்..!

அருண்மொழிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல் அடிக்கடி வெளியே சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் அருண்மொழி கர்ப்பமானார். 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த வேல்முருகனுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. 

Pregnant after 9 years by fake boyfriend...Wife murder

கள்ளக்காதலன் மூலம் உருவான கருவை கலைக்க மறுத்ததால் மனைவியை கழுத்து அறுத்து கொன்றேன் என கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (30). திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி, ஜீவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண்மொழி (27). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் அருண்மொழிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல் அடிக்கடி வெளியே சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் அருண்மொழி கர்ப்பமானார். 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த வேல்முருகனுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. அப்போது, அருண்மொழியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. 

இதையும் படிங்க;- உன் லவ் உண்மைனா.. இதை நீ செய்யணும்.. மாணவிக்கு காதலன் வைத்த கொடூரமான டெஸ்ட்..!

Pregnant after 9 years by fake boyfriend...Wife murder

இதனால், மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த அருண்மொழி கடந்த 10 நாட்களுக்கு  முன்பு திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கணவர் வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அருண்மொழி தனது கள்ளக்காதலனுடன் சென்றது தெரியவந்தது. அப்பகுதியில் மறைந்திருந்த இருவரையும் கண்டு பிடித்தனர்.  பின்னர், அருண்மொழியை கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரத தாய் சின்னபாப்பாவுடன் திருப்பத்தூர் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் வேல்முருகன், மனைவியை சமாதானம் செய்ய 2 நாட்களுக்கு முன்பு மாமியார் வீட்டுக்கு வந்து தங்கினார். நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாலையில் ஏற்பட்ட தகராறில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்ததிரமடைந்த வேல்முருகன் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியால் அருண்மொழியின் கழுத்து, வாய், கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கிய அருண்மொழி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து வேல்முருகன் பைக்கில் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருண்மொழி உடலை கைப்பற்றி பிரேதத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தப்பி ஓடிய வேல்முருகனை  போலீசார் தீவிரமாக தேதடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க;- வெளிநாடு சென்ற கணவன்! சைடு கேப்பில் மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்க முயன்ற கொடூர தாய்! வெளியான பகீர் சம்பவம்

Pregnant after 9 years by fake boyfriend...Wife murder

காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பே்போது, வேல்முருகன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்;- தகாத உறவில் உருவான கர்ப்பத்தை கலைத்துவிடு, இனிமேல் எந்த பிரச்னையும் இல்லாமல், சந்தோஷமாக சேர்ந்து வாழலாம். என்னுடன் வந்துவிடு' என வேல்முருகன் அழைத்துள்ளார். அதற்கு அருண்மொழி குழந்தை இல்லாததால் தான் தகராறு ஏற்பட்டது. தற்போது நான் கர்ப்பிணியாக உள்ளேன்.  இந்த கருவை நான் கலைக்கமாட்டேன். நான் தனிமையில் இங்கேயே வாழ்ந்து கொள்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே' என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன். மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியால் அருண்மொழியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து, வேல்முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios