Youtube : ஓமலூரை அடுத்த புளியம்பட்டி அருகே கடந்த 20-ந் தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில், 2 கைத்துப்பாக்கிகளுடன் 2 வாலிபர்கள் பிடிபட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஜெயக்குமார் மகனும், என்ஜினீயருமான சஞ்சய் பிரகாஷ் (வயது 25) என்பதும், சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த முத்துவின் மகனும் பி. பி. ஏ. பட்டதாரியுமான நவீன் சக்கரவர்த்தி (25) என்பதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அவர்கள் ஏற்காடு அடிவாரத்தில் கருங்காலி என்ற இடத்தில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து யூ டியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்தனர்.

இதையும் படிங்க :ஸ்டாலின் ஆட்சி நம்பர் 1.. அப்போ கலைஞர் ஆட்சி நல்லா இல்லையா ? உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை

இதையடுத்து அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.நண்பர்களான அவர்கள் இருவரும், என்ஜினீயர் மற்றும் பட்டதாரி என்பதால் துப்பாக்கியை செய்து பார்க்கலாம் என திட்டமிட்டு வீட்டை வாடகைக்கு எடுத்து கைத்துப்பாக்கி தயாரித்ததாக கூறினர். மேலும் வீரப்பன், பிரபாகரன் போன்று பெரிய ஆளாக வரவேண்டும் என்ற எண்ணம் உருவானதாகவும், அதேபோல் இயற்கைக்கு எதிராக உள்ளவர்களை அழித்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்தோம்.

அதற்காக துப்பாக்கி தயாரித்ததாகவும் அவர்கள் இருவரும் மாற்றி, மாற்றி வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து விசாரணை காலம் முடிந்ததை அடுத்து அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.இதனிடையே போலீஸ் விசாரணையின் போது, துப்பாக்கி தயாரிக்க அவர்களுக்கு உதவியதாக, சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார பணி மேற்கொண்டு வந்த சேலம் அழகாபுரத்தை சேர்ந்த கபிலர் (23) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :"புலி வருது, புலி வருது.. பூனை கூட வராதுங்க !"- அண்ணாமலையை அட்டாக் செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி

இதையும் படிங்க : G Square Case: ஜி ஸ்கொயர் வழக்கு அதிரடி மாற்றம்..விகடன்,சவுக்கு சங்கர்,மாரிதாஸ் விடுவிப்பு !