சென்னையில் தாம்பத்திய உறவுக்கு இடையூறாக இருந்ததாக கூறி முதல் கணவனின் குழந்தையை, 2 வது கணவனுடன் சேர்ந்து சிகரெட்டால் சூடு வைத்தும், கொடூரமாக அடித்தும் சிதர்வதை செய்து வந்த தாய் மற்றும் அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அடையாறை சேர்ந்த 28 வயதாகும் பானு என்பவருக்கு, இரண்டரை வயதில் ஏஞ்சல் எனும் ஒரு குழந்தை உள்ளது. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது கணவரை பிரிந்து வந்து, குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது அதே பகுதியில் வசித்து வரும் ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பானு தனது குழந்தையுடன் ஜெகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாயார் கன்னியம்மாவுக்கு போன் செய்த பானு, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க:சென்னையில் பிரபல கஞ்சா வியாபாரி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. அலறி கூச்சலிட்டு ஓடிய பொதுமக்கள்.!

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் முகத்தில் காயம், சூடு வைத்த தழும்பு இருந்ததை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

அதன்பேரில் விரைந்து வந்த சாஸ்திரி நகர் காவல்துறையினர் குழந்தையின் பாட்டி கன்னியாம்மா மற்றும் தாய் பானுவிடம் விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

தாம்பத்திய உறவில் இருப்பதற்கு முதல் கணவரின் குழந்தை இடைஞ்சலாக இருந்ததாக கருதி, பானுவும் ஜெகனும் சேர்ந்து குழந்தையை அடித்தும் சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தி வந்துள்ளனர். 

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை குழந்தை குறித்து இருவருக்குமிடையே தகராறு முற்றியதில், இருவரும் சேர்ந்து குழந்தையை ஆத்திரத்தில் பலமாக அடித்ததில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த போது தான், இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

மேலும் படிக்க:ஷாக்கிங் நியூஸ்.. எல்கேஜி படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை.. வேன் உதவியாளரை போச்சோவில் தூக்கிய போலீஸ்.!

பின்னர் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பானு மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஜெகன் ஆகியோரை கைது செய்தனர்.