சென்னையில் பிரபல கஞ்சா வியாபாரி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. அலறி கூச்சலிட்டு ஓடிய பொதுமக்கள்.!

சென்னை புளியந்தோப்பு காந்திநகர் எட்டாவது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (33). இவர் மீது இரண்டு கொலை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Chennai ganja dealer murder.. police investigation

சென்னையில் பிரபல கஞ்சா வியாபாரி 5 பேர் கொண்ட சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை புளியந்தோப்பு காந்திநகர் எட்டாவது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (33). இவர் மீது இரண்டு கொலை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறை  சுவற்றின் மீது நண்பர்களுடன்  கார்த்திகேயன் பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது, திடீரென அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட மர்ம கும்பல் கார்த்திகேயனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறி கூச்சலிட்டப்படி அங்கும் இங்குமாக ஓடினர்.

இதையும் படிங்க;- லேடீஸ் ஹாஸ்டலில் குளிக்கும் பெண்கள் டார்கெட் ! ஆபாச வீடியோ எடுத்த நபரை வெளுத்த மாணவிகள் !

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கார்த்திகேயனை மீட்டு ஆட்டோ மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக பேசன் பிரிட்ஜ் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 2013ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ரஞ்சித் என்பவரை கார்த்திகேயன் கொலை செய்துள்ளார். இதற்கிடையில் கார்த்திகேயன் கடந்த மார்ச் மாதம் பேசன் பிரிட்ஜ் போலீசாரால் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 15ம் தேதி அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவர் சிறையில் இருந்து வெளிவந்த தகவல் அறிந்த மர்ம நபர்கள் திட்டம் போட்டு இந்த கொலையை அரங்கேற்றியுள்ளது. உயிரிழந்த கார்த்திகேயனுக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. 

இதையும் படிங்க;- என் புருஷன நினைச்சு தான் நீங்க இரவில் தூங்கணும்.. மாணவிகளை மருமகளாக பாவித்த ஆசிரியைக்கு ஆப்பு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios