லேடீஸ் ஹாஸ்டலில் குளிக்கும் பெண்கள் டார்கெட் ! ஆபாச வீடியோ எடுத்த நபரை வெளுத்த மாணவிகள் !
பெண்கள் விடுதியின் துப்புரவு பணியாளர் ஒருவர், அங்கிருந்த மாணவிகளின் குளியல் வீடியோக்களை மொபைல் போனில் படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் பகுதியில் துல்சி நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு மருத்துவ தேர்வுகளுக்காக தயாராகும் மாணவிகள், தங்கி படிக்கும் பெண்கள் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவிகள் தங்கள் வசதிக்காக தங்கியுள்ளனர்.
இந்த விடுதியை அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியான கூடுதல் எஸ்.பி ஒருவர் நடத்திவருகிறார். இந்நிலையில் விடுதியின் துப்புரவு பணியாளர் ஒருவர், அங்கிருந்த மாணவி ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும்போது அவரை இரகசியமாக மறைந்திருந்து தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இதனை கண்ட சக மாணவி ஒருவர், அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்துள்ளார்.
இதையும் படிங்க..‘TTFவோட பவர் தெரியாம இருக்கீங்க.. கொஞ்சம் தான் பொறுமை’ - மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!
பின்னர் அதனை சோதித்தபோது அதில், பல பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், குளியல் வீடியோக்கள் என பல ஆபாசமான விஷயங்கள் இருந்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, சக பெண்களிடம் தெரிவித்தது மட்டுமின்றி, இவரை விடுதி காப்பாளரிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர்கள் குற்றவாளியான துப்புரவு பணியாளரை தப்பிக்க விடாமல் பார்த்துக்கொண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க..‘கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு !’
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது மொபைல் போனையும் பறிமுதல் செய்தபோது அதில் வீடியோ இருந்தது உறுதியானது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க..“சரியான உள்ளாடைகளை அணியுங்கள்..! பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விதித்த சர்ச்சை உத்தரவு !”