‘கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு !’
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து உள்ளது.
நம் இந்திய நாட்டின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை ஆகும். இந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4 ஆம் தேதியும், சரஸ்வதி பூஜை அக்டோபர் 5- ம் தேதியும் நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாட உள்ளனர்.
இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கும் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதியான நாளை சனிக்கிழமையும், காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. பிறகு அதை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க..‘TTFவோட பவர் தெரியாம இருக்கீங்க.. கொஞ்சம் தான் பொறுமை’ - மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிடிஎஃப் வாசன்!
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. அதேபோல அனைத்து கல்லூரிகளும் விடுமுறை அளித்துள்ளது. சனிக்கிழமை 1-ம் தேதி முதல் அக். 5 ஆம் தேதி வரையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில், இடையே அக்டோபர் 3-ம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தனது உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் அக்டோபர் 3 ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அக்டோபர் 8 ஆம் தேதி கல்லூரிகள் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க..அட ச்சீ.! இப்படியா பண்றது..ஹோட்டலில் ரூம் எடுத்த 2 பெண்கள் - நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி !