கோவை துடியலூர் அருகே ஓரினசேர்க்கைக்கு அழைத்த நண்பன் தலையில் கல்லைபோட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை துடியலூர் அருகே ஓரினசேர்க்கைக்கு அழைத்த நண்பன் தலையில் கல்லைபோட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை துடியலூர் பகுதியில் குப்பை பொறுக்கும் வேலை செய்து வருபவர் முகமது பாசில். 28 வயதான இவருக்கு பன்னாரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் தினமும் குப்பை பொறுக்கிகொண்டு தெருவோரங்களில் தங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு துடியலூர் பகுதியில் குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த 51 வயதான ரமேஷ் என்பவருடன் முகமது பாசிலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: 13 வயது சிறுவனுடன் தகாத உடலுறவு.. குழந்தை பெற்ற 31 வயது பெண்.. கதறும் சிறுவனின் தாய்!!

இவர்கள் தினமும் குப்பை பொறுக்கி வரும் வருமானத்தில் இரவில் மது அருந்தி வந்துள்ளனர். அதன்படி, வழக்கம் போல் முகமது பாசிலும், ரமேஷும் மது அருந்திவிட்டு தனியார் இனிப்பு கடை முன்புறம் உள்ள தரையில் படுத்துள்ளனர். அப்போது முகமது பாசில் ரமேஷை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ரமேஷை தாகத வார்த்தைகளால் திட்டி ஆடையில்லாமல் நடக்க வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ரமேஷ் அதிகாலை 2 மணியளவில் முகமது பாசில் தூங்கிக்கொண்டுஇருந்த போது, அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்... கடிதம் எழுதிவைத்துவிட்டு ஒருவர் தற்கொலை!!

இதில் முகமது பாசில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து ரமேஷ் அருகில் இருந்த காவல் நிலையத்தில் நடந்ததை கூறி சரணடைந்தார். இதை அடுத்து ரமேஷ் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த முகமது பாசில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.