திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருக்கிறது குண்டடம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(26). அந்தப்பகுதியில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது பெரியப்பா மகள் ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). உறவுமுறையில் சந்திரசேகரனுக்கு ரேகா தங்கை முறை ஆவர். இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வசிக்கும் அதே தெருவில் இருக்கும் இளம்பெண்ணை சந்திரசேகரன் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். காதலுக்கு தூதாக ரேகா உதவியிருக்கிறார். மேலும் ரேகாவின் வீட்டில் வைத்து தனது காதலியுடன் அடிக்கடி சந்திரசேகரன் பேசி வந்திருக்கிறார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் தனது தங்கையான ரேகாவிடம் ஆசை வார்த்தைகள் கூறியும் மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் ரேகாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் ரேகா 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதிர்ந்து போன பெற்றோர் அது குறித்து விசாரித்ததில் நடந்தவற்றை ரேகா கூறியிருக்கிறார். செய்வதறியாது திகைத்த அவர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். போலீசார் தேடுவதை அறிந்து சந்திரசேகர் தலைமறைவாகி இருக்கிறார். இருப்பினும் அவரை வளைத்து பிடித்த காவலர்கள் போக்சோவில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் . அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: 'வாடகை கட்டிடமா.. ஆகச்சிறந்த அந்தர்பல்டியால இருக்கு'..! ஸ்டாலினை விடாது வெறுப்பேற்றும் ராமதாஸ்..!