அண்ணி மீது ஏற்பட்ட ஒருதலை காதலால் அண்ணனை கல்லால் தாக்கி தம்பி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.  

அண்ணி மீது ஏற்பட்ட ஒருதலை காதலால் அண்ணனை கல்லால் தாக்கி தம்பி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெரும்பாலான குற்றங்கள் காதல், ஒருதலைக் காதல், கள்ளக்காதல் போன்றவற்றை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் சிலர் தங்களது அற்ப சுகத்திற்காக முறைதவறி நடக்கும் சம்பவங்கள் பரவலாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அண்ணி மீது ஏற்பட்ட ஒருதலை காதலால் அண்ணனை தம்பி கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

முழு விவரம் பின்வருமாறு:- மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் தேஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரேதியை சேர்ந்தவர்கள் மூன்று சகோதரர்கள். முதல் இரண்டு சகோதரர்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. இந்நிலையில் கடைசி சகோதரன் பரத் சவுத்ரி (28) திருமணம் ஆகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் பரத் சவுத்ரிக்கு அண்ணியின் மீது ஒருதலை காதல் ஏற்பட்டது, இதனால் அவர் அண்ணியிடம் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டார், மைத்துனரின் நடத்தை குறித்து அண்ணி ஹிந்தியா தனது கணவர் சஞ்சய்யிடம் கூறினார்.

இதையும் படியுங்கள்: பெற்ற மகளுக்கே துரோகம்... மருமகனை வீட்டிற்கே வரவழைத்து தனி அறையில் மாமியார் உல்லாசம்... அடித்து கொலை.

இந்நிலையில் மனைவி ஹிந்தியாவை பத்திரமாக அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடலாம் என சஞ்சய் திட்டமிட்டார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவி ஹிந்தியாவை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக அவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். அப்போது பரத் சவுத்ரியும் உடன் வருவதாக அடம்பிடித்தார். பின்னர் சஞ்சய் சவுத்ரியும் அதற்கு ஒப்புக்கொண்டார், இதில் மூவரும் இருசக்கர வாகனத்தில் சோர்ஹாட்டாவை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து சத்னா செல்லும் பேருந்தில் மனைவியை சஞ்சய் ஏற்றி அனுப்பினார். 

இதையும் படியுங்கள்: உங்கள் எம்.பி கெஸ்ட் அவுசுக்கு அழைத்துச் சென்று பலமுறை உடலுறவில் ஈடுபட்டார்.. முதல்வரிடம் கதறும் துபாய் பெண்

பேருந்து புறப்பட்டு சென்றதும், தான் அண்ணி மீது காதலில் இருந்து வந்த நிலையில், அண்ணியை ஊருக்கு அனுப்பி வைத்த கோபம் பரத் சவுத்ரிக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அண்ணனை அங்கிருந்து சோனோரா கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கு சஞ்சய் மற்றும் பரத் சவுத்திரி இருவரும் மது வாங்கிக்கொண்டு கெரியா கோத்தர் வந்து அங்கிருந்து அண்ணனை கரிஜார் காட்டுப் பகுதிக்கு பரத் சவுத்ரி அழைத்துச் சென்றார். பின்னர் இருவரும் அங்கு ஒன்றாக மது அருந்தினார். அப்போது சஞ்சய் சவுத்ரி போதை தலைக்கேறியது, அவர் மது போதையில் மயங்கினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பரத் சவுத்ரி அருகில் இருந்த கல்லை எடுத்து அண்ணன் சஞ்சய் சௌத்ரியின் பின்னந்தலையில் ஓங்கி அடித்தார். அதில் சஞ்சய் சவுத்ரி ரத்த வெல்லத்தில் மயங்கினார், அதே கல்லால் நெற்றி மற்றும் முகத்தில் பல இடங்களில் வெறி தீர அடித்து அண்ணனை கொன்றார். அதன்பிறகு ராம்பூர் பகேலன் வழியாக சாத்னா வழியாக வீடு திரும்பினார். இந்நிலையில் சஞ்சையே காணவில்லை என குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவரது அண்ணி கொடுத்த தகவலின்படி பரத் சவுத்ரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.