மகன் பிறந்தநாள் அதுவுமா பார்க்க விடாத தாய்.. காதல் மனைவியை ஓட ஓட விரட்டி கண்டம் துண்டமாக வெட்டி வீசிய கணவர்

செல்வக்குமாரின் மகனுக்கு பிறந்த நாள் என்பதால், கடையில் கேக் வாங்கிக் கொண்டு மகனை பார்க்க மாமனார் வீட்டிற்கு செல்வக்குமார் வந்தார். அங்கு சவுந்தரவல்லி தனியாக இருந்தார். அவரிடம் செல்வக்குமார், மகனை பார்க்க வேண்டும். அவனுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்தார்.

Love wife murder...Husband Arrest in tirunelveli

நெல்லை அருகே மகன் பிறந்த நாளன்று மனைவியை ஓட, ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள தேவர்குளத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (28). கூலித் தொழிலாளி. இவர், இதே ஊரை சேர்ந்த தனது உறவினரான சவுந்திரவல்லியை (25) காதலித்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டாக செல்வக்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுந்தரவல்லி, பெற்றோர் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். சவுந்தரவல்லியின் பெற்றோர் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் 3 போலீஸ்காரர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்து அதிர்ந்து போன கணவர்.!

Love wife murder...Husband Arrest in tirunelveli

இந்நிலையில் நேற்று செல்வக்குமாரின் மகனுக்கு பிறந்த நாள் என்பதால், கடையில் கேக் வாங்கிக் கொண்டு மகனை பார்க்க மாமனார் வீட்டிற்கு செல்வக்குமார் வந்தார். அங்கு சவுந்தரவல்லி தனியாக இருந்தார். அவரிடம் செல்வக்குமார், மகனை பார்க்க வேண்டும். அவனுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்தார்.

இதையும் படிங்க;- நைட்டு திருட வந்த இடத்தில் நைட்டி விலகிய நிலையில் தூங்கிய கல்லூரி மாணவி.. சல்லாபத்தில் பாய்ந்த சிறுவன்.!

Love wife murder...Husband Arrest in tirunelveli

இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் மனைவியை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சவுந்தரவல்லி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சவுந்தரவல்லி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, மனைவி கொலை செய்த செல்வக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios