காதல் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிகேட்ட கணவரை கழற்றிவிட்டு எஸ்கேப்.. இறுதியில் நடந்த சோகம்..!

கல்லூரியில் படிக்கும் தர்மபுரியை சேர்ந்த மாணவி சுமலதா, விமல்குமாரும் காதலித்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல் விமல்குமார் காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். 

love wife escape.. Youth Suicide in namakkal

படிக்கும் போதே ரகசிய திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் விமல்குமார் (21). நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் தர்மபுரியை சேர்ந்த மாணவி சுமலதா, விமல்குமாரும் காதலித்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல் விமல்குமார் காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். 

இதையும் படிங்க;- பார்த்ததுமே பத்திக்கிச்சு.. 20 வயது இளைஞரை கரெக்ட் செய்து உல்லாசம்.. வெளியே கசிந்த கள்ள உறவால் நடந்த அதிர்ச்சி

love wife escape.. Youth Suicide in namakkal

பின்னர், நாமக்கல்லில் உள்ள தனது தாத்தா வீட்டில் காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதனிடையே, அவரது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது விமல்குமாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமல்குமார், மனைவியிடம் இது பற்றி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த விமல்குமார், மனைவியிடம் இதுபற்றி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், வீட்டை வீட்டு வெளியேறி அவரது மனைவி, கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். 

love wife escape.. Youth Suicide in namakkal

இதனால் மனமுடைந்த விமல்குமார், போடிநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டில் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விமல்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  புது மணப்பெண் கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம்.. அலறிய மாப்பிள்ளை.. திருமணம் நடந்த 3 நாளில் அதிர்ச்சி சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios