மகளுடன் தனிமையில் உல்லாசம்... ஆபாச படங்களை அம்மாவிற்கு அனுப்பி மிரட்டிய இளைஞரை அலேக்காக தூக்கிய போலீஸ்...!
இதையடுத்து நெருங்கிய பழகிய இருவரும் தனியாக இருக்கும் பல சந்தர்பங்களில் ஒன்றாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள கிராமத்தில் கணவனை இழந்த சகிதா என்ற பெண்மணி, தனது 2 இளம் வயது மகள்களுடன் வசித்து வந்துள்ளார். அவரது 26 வயதான மூத்த மகள் ஷர்மிளா நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அழகிய பாண்டியபுரம் காட்டுப்புதூரைச் சேர்ந்த மர்பின் தனேஷ் என்ற இளைஞருக்கும், அந்த பெண்ணுக்கும் முகநூல் வழியாக காதல் மலர்ந்துள்ளது. முகநூல் மூலம் முதலில் நண்பர்களாக பழகியவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர்.
இதையடுத்து நெருங்கிய பழகிய இருவரும் தனியாக இருக்கும் பல சந்தர்பங்களில் ஒன்றாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளனர். எப்படியும் திருமணம் செய்து கொள்ள போகிறவர் தானே என்ற எண்ணத்தில் ஷர்மிளாவும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதற்கிடையே ஷர்மிளாவுக்கு குவைத்தில் நர்ஸ் வேலை கிடைத்துள்ளது. அதற்கு காதலர் மர்பின் தனேஷும் உதவி புரிந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் ஷர்மிளா குவைத்து சென்றடைந்துள்ளார். அங்கு வேலையில் சேர்ந்த பிறகு காதலன் மர்பின் தனேஷ் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளார். அப்படி கொடுக்க மறுத்தால் தனிமையில் இருந்த போது எடுத்துக்கொண்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் அப்லோடு செய்வேன் என மிரட்டியுள்ளார்.
இதனிடையே ஷர்மிளா வேறு ஒருவரை காதலிப்பதாக மர்பின் தனேஷுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் கோபமடைந்த தனேஷ் காதலிக்கும் போது இருவரும் நெருங்கி பழகிய ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை ஷர்மிளாவின் அம்மாவிற்கு அனுப்பிவைத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், அச்சு கிராம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி கொடுத்த சாக்ஷி... புடவையில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி அட்ராசிட்டி...!
மர்பின் தனேஷ் என்பவர் தனது மகளை பணம் கேட்டு மிரட்டுவதாகவும், கொடுக்கவில்லை என்றால் காதலிக்கும் போது எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தனேஷை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!
அப்போது தான் ஷர்மிளா குவைத் செல்ல பண உதவி செய்ததாகவும், அங்கு சென்ற பிறகு தன்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்ட அவர், வேறு நபரை காதலித்து வருவதாகவும், அவருக்கே ஷர்மிளாவை திருமணம் செய்து வைக்க அவரது தாயார் திட்டமிடுவதாகவும், அதனால்தான் என்னுடன் பழகிய நாட்களில் நாங்கள் எடுத்து கொண்ட வீடியோ, போட்டோக்களை மார்ப் செய்து ஷர்மிளா மற்றும் அவரது தாயாருக்கு அனுப்பி வைத்தேன்.. என்னை ஏமாற்ற நினைக்காதே என்றும் சொன்னேன் என விசாரணையில் தெரிவித்துள்ளார்.