மாணவி சத்தியா தயாரிடம் ஒன்னரை மணி நேரம் துருவித் துருவி விசாரணை.. ரயில் ஓட்டுநரிடம் விசாரிக்க CBCID திட்டம்
மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அவரது தாய் ராமலட்சுமி மற்றும் குடும்பத்தாரிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார். இன்று காலை 7 மணி முதல் 8:30 மணி வரை விசாரணை நடைபெற்றது
.
மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அவரது தாய் ராமலட்சுமி மற்றும் குடும்பத்தாரிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார். இன்று காலை 7 மணி முதல் 8:30 மணி வரை விசாரணை நடைபெற்றது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவியை கடந்த 14 ஆம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஸ் என்ற வாலிபர் ரயில் முன் தள்ளி படுகொலை செய்தார். காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை ஒருதலை காதலன் சதீஷ் பட்டப்பகலில் ரயிலில் தள்ளி கொன்ற சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனை அடுத்து சென்னை தரமணி பகுதியில் பதுங்கியிருந்த கொலையாளி சதீஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள்: நான் லீவுல இருக்கேன்.. வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்கிட்டு போ.. விதவை பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த விஏஓ.!
மகள் இறந்த செய்தியைக் கேட்டு மறுநாள் தலைமை காவலரும், மாணவியின் தந்தையுமான மாணிக்கம் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து இந்த கொலை வழக்கு தீவிரமடைந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட சதீஷிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தன்னை காதலிக்க மறுத்துவந்த சத்தியாவுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது தெரிந்ததால், ஆத்திரத்தில் அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டதாகவும், ஆனால் மக்கள் அதிகம் கூடியதால் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும், கைதான சதீஷ் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதையும் படியுங்கள்: புல் மப்பில் தகராறு.. தடுக்க முயன்ற காவலர்களை பீர்பாட்டிலால் குத்திய ரவுடியின் நிலைமையை பார்த்தீங்களா?
இதனை அடுத்து கொலையாளி சதீஷின் தந்தையும், உயிரிழந்த மாணவியின் தந்தையும் காவல்துறையில் பணியாற்றுவதால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. சிபிசிஐடி காவல் ஆய்வாளர் ரம்யா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் கடந்த 15ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அங்கு தடயங்களையும் சேகரித்தனர்.
வழக்கு தொடர்பான ஆதாரங்களையும் ரயில்வே போலீசாரிடமிருந்து பெற்றனர். இந்நிலையில் தங்களது இரண்டாவது நாள் விசாரணையை மாணவியின் குடும்பத்திடம் நடத்தினர். கொல்லப்பட்ட மாணவி சந்தியாவின் தாயார் ராமலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். காலை 7 மணி முதல் 8: 30 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து சத்தியா தள்ளப்பட்ட ரயிலை இயக்கிய ஓட்டுநர் கோபால் என்பவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.