உல்லாசத்துக்கு மறுத்து அவாய்ட் பண்ண கள்ளக்காதலி.. நள்ளிரவில் கள்ளக்காதலன் என்ன செய்தான் தெரியுமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கும் சங்கர நத்தத்தை சேர்ந்த பரமசிவம்(50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வேலைக்கு சென்ற பின் பரமசிவத்துடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 4 இளம்பெண்கள்.. ஒரு நைட்டுக்கு இவ்வளவு வா?
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கள்ளக்காதலுடன் பேசுவதை ராஜேஸ்வரி தவிர்த்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், வெளியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த ராஜேஸ்வரியை பரமசிவம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தார்.
வெளியூர் சென்றிருந்த கணவர் அதிகாலை வந்து பார்த்த போது திண்ணையில் மனைவி ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- துப்பட்டா போடாத பெண்களைப் பார்த்தாலே இப்படி செய்யணும் போல தோணுது! இதுவரை 100 பேர்! சென்னை இளைஞர் பகீர்.!
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்டு தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பரமசிவத்தை தேடி வருகின்றனர்.