துப்பட்டா போடாத பெண்களைப் பார்த்தாலே இப்படி செய்யணும் போல தோணுது! இதுவரை 100 பேர்! சென்னை இளைஞர் பகீர்.!
சென்னையில் துப்பட்டா அணியாமல் சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் தனக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த சரவணன் (31) என்பவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்: 2021ம் ஆண்டு திருமங்கலம் பகுதியில் தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு சரவணன் பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார். ஆனால், பொதுமக்கள் அவரை விரட்டி, பிடித்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, போக்சோவில் வழக்குபதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே அண்ணா நகர், ஜெஜெ நகர், திருமங்கலம், பெரவள்ளூர் ஆகிய காவல் நிலையங்களில் தனியாக சாலையில் செல்லும் அழகான பெண்கள் மற்றும் மார்டன் உடையில், சுடிதார் அணிந்து துப்பட்டா அணியாத பெண்களை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தினமும் 5 பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளது தெரியவந்தது.
இதனிடையே, போலீசாரிடமிருந்து சரவணன் தப்பியோட முயன்ற போது சாலையோரம் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டது. இதனையத்து, முதலுதவி சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.