கூலிப்படை ஏவி காதல் கணவர் கொலை.. நாடகமாடிய மனைவியின் குட்டு அம்பலம்.. வெளியான பரபரப்பு தகவல்..!

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை தீர்த்துக் கட்டிவிட்டு நகைக்காக கொலை நடந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

illegal love...husband murder.. Dramatic wife arrested

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை தீர்த்துக் கட்டிவிட்டு நகைக்காக கொலை நடந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வென்றிலிங்கபுரத்தை சேர்ந்தவர் வைரவசாமி (30). இவரது மனைவி முத்துமாரி (23). கணவன்-மனைவி இரண்டு பேரும் சுரண்டை அருகே உள்ள வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 19ம் தேதி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல்  வைரவசாமியை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு முத்துமாரியின் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். இந்தத சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, முத்துமாரி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முத்துமாரியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நகை கொள்ளை நாடகமாடியது தெரியவந்தது.

இதையும் படிங்க;- 9 வருஷமாக கணவனால் கர்ப்பம் ஆகாத மனைவி கள்ளக்காதலனால் கர்ப்பம்..! இறுதியில் நடந்த பகீர் சம்பவம்..!

illegal love...husband murder.. Dramatic wife arrested

இதுதொடர்பாக முத்துமாரி அளித்த வாக்குமூலத்தில்;- நானும், வைரவசாமியும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் கடந்த 3 ஆண்டுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்தோம். எங்களுக்கு குழந்தை இல்லை. திருமணத்திற்கு முன் வாலிபர் இசக்கிமுத்துவையும் காதலித்தேன். திருமணத்துக்கு பின்னரும் இசக்கிமுத்துவுடன் நெருங்கி பழகி வந்தேன். இது எனது கணவர் வைரவசாமிக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக இருவரையும் கண்டித்தார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பழகி வந்தேன். எனவே இசக்கிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

illegal love...husband murder.. Dramatic wife arrested

அதன்படி  பணி முடிந்து கிளம்பும் போது, இசக்கிமுத்துவுக்கு தகவல் தெரிவித்தேன். அவரும்  நண்பர்களுடன் தயாராக இருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது அவர்கள் திட்டப்படி வழிமறித்து கணவரை அடித்து கொலை செய்தனர். நகைக்காக கொலை செய்வது போன்று இருந்தால் யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால், போலீசார் துருவிதுருவி விசாரித்தனர். இதனால் உண்மையை மறைக்க முடியவில்லை. கொலை செய்ததை ஒப்புக் கொண்டேன் என முத்துமாரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து முத்துமாரியை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் கள்ளக்காதலன் வீரசிகாமணியை சேர்ந்த இசக்கிமுத்து (29), அவரது நண்பர்கள் காளிராஜ் (25), அங்குராஜ்(23) ஆகிய மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க;-  இது இருப்பதால்தானே எவளையோ தேடி போற! கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஆண் உறுப்பில் ஊற்றிய மனைவி!வலியால் அலறிய கணவர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios