ஆன்லைனில் சயனைடு ஆர்டர் செய்து, மாமனாருக்கு மதுவில் கலந்து கொடுத்தேன்.. மருமகன் கொடுத்த வாக்குமூலம்.

பணம் தராததால்  சயனைடு கலந்த மதுவை கொடுத்து மாமனாரை மருமகன் கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மறுபடியும் நடத்திய விசாரணையில் சயனைடு ஆன்லைனில் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

I ordered cyanide online and gave it to father-in-law mixed with alcohol.. Son-in-law's statement.

விசித்திரம் நிறைந்த இந்த உலகில் திரும்பிய பக்கமெல்லாம் கொலை கொள்ளை கற்பழிப்புகள் அரங்கேறி வருகிறது, அற்பத்தனமான காரணங்களுக்கு கூட மனித உயிர்கள் பறிக்கப்படுகிறது, இந்த வரிசையில் நிலம் விற்ற  பணத்தை பங்கு தரவில்லை என்பதற்காக மாமனார் உயிரை மதுவில் விஷம் கலந்து மருமகன் பறித்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

I ordered cyanide online and gave it to father-in-law mixed with alcohol.. Son-in-law's statement.

இதையும் படியுங்கள்:  கல்யாணம் ஆன பெண்ணை கூட்டி வந்து விபச்சாரம்.. காசுக்கு அசைப்பட்டு மாமா வேலை பார்த்த போலீஸ்.

முழு விவரம் பின்வருமாறு:-  பொள்ளாச்சி பணப்பட்டி அருகே  சூளுரை சேர்ந்தவர் மனோகரன், வேலுச்சாமி, நண்ர்களாக இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். வேலைக்கு சென்று விட்டு மாலையில் மது அருந்திய இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அங்கிருத்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்கள் குடித்தது, கள்ளச்சாராயமா அல்லது போலி மதுபானமா என விசாரணை நடத்தினார்.

இதையும் படியுங்கள்: மகனின் சடலத்தின் மீது உப்பு கொட்டி மூடிய பெற்றோர்.. உயிருடன் வருவான் என நப்பாசையில் பரிதாபம்.

இதில் மது குடித்து உயிரிழந்த மனோகரன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது நிலத்தில் ஒரு பகுதியை 40 லட்ச ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. இந்நிலையில் பணத்திற்காக மாணவர்கள் யாரேனும் கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களின் மனைவி மற்றும் மகள், மருமகன் உள்ளிட்டோரை போலீசார் விசாரித்தனர். அதில் மனோகரனின் மருமகன் சத்யராஜ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

I ordered cyanide online and gave it to father-in-law mixed with alcohol.. Son-in-law's statement.

போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர், அப்போது நடந்த உண்மைகளை சத்யராஜ் கக்கினார், நிலம் விற்ற பணத்தில்  மாமனாரிடம் சிறிய தொகை கேட்டேன் ஆனால் அவர் தர மறுத்தார், இதனால்  ஆத்திரமடைந்த நான் சயனைடை ஆன்லைனில் ஆர்டர் செய்து அதை மதுவில் கலந்து மாமனாருக்கு குடிக்கக் கொடுத்தேன், பாவம் அதை பருகிய அவரும் அவரது நண்பரும் உயிரிழந்து விட்டனர் என கூறினார்.

இதைக்  கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஆன்லைனில் சயனைடு எப்படி கிடைக்கிறது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios