மகனின் சடலத்தின் மீது உப்பு கொட்டி மூடிய பெற்றோர்.. உயிருடன் வருவான் என நப்பாசையில் பரிதாபம்.
நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் உடல்மீது உப்பு கொட்டி வைத்து மகன் உயிருடன் வருவான் என பெற்றோர்கள் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் உடல்மீது உப்பு கொட்டி வைத்து மகன் உயிருடன் வருவான் என பெற்றோர்கள் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இந்த துயரம் நடந்துள்ளது.
எத்தனையோ மருத்துவ அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கை இன்னும் மண்டிக் கிடக்கிறது. அதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன, இந்த வரிசையில் உயிரிழந்த மகன் உயித் தொழுந்து வருவான் என நம்பி பெற்றோர்கள் மகனின் உடல் மீது உப்புக் கொட்டி வைத்து காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-
இதையும் படியுங்கள்: முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத வடமாநில இளைஞர்… கடுப்பான கடைக்காரர் செய்த அதிர்ச்சி சம்பவம்!!
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் சிர்வார் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சுரேஷ், அதிக மழை பெய்து வரும் நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் நீராடச் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். மகன் உடல் மீது உப்பு கொட்டி வைத்தால் உயிருடன் வருவான் என எங்கோ யாரோ ஒருவர் கூறியது பெற்றோர்க்கு நினைவுக்கு வந்தது. பின்னர் அதை அப்படியே நம்பிய குடும்பத்தினர், மகனின் உடலை உப்புப் பொட்டு மூடி வைத்த பல மணி நேரம் காத்திருந்தனர்.
இதையும் படியுங்கள்: கல்யாணம் ஆன பெண்ணை கூட்டி வந்து விபச்சாரம்.. காசுக்கு அசைப்பட்டு மாமா வேலை பார்த்த போலீஸ்.
அதாவது வாட்ஸ் அப்பில் சடலத்தின் மீது 4 முதல் 5 மணிநேரம் உட்பு போட்டு அடைத்து வைத்தால் அந்த நபர்கள் வீடு திரும்புவார் என வந்துள்ளது, அது நம்பிய குடும்பத்தினர் அதிக அளவில் உப்பு வாங்கி மகனின் சடலத்தின் மீது போட்டு வைத்தனர் என கூறப்படுகிறது, ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் பலனில்லை, அதன் பிறகு மகன் உயிருடன் வரம் மாட்டான் என்பது பெற்றோர்களுக்கு தெரிந்தது. ஆனாலும் அவர்களால் அதை ஏற்க முடியவில்லை. பின்னர் மகளின் சடலத்தை அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து சிறுவனின் உறவினர் ஒருவர் கூறுகையில், சமிபத்தில் சமூகவலைதளத்தில் இதுபோன்ற ஒரு செய்தியை பார்த்த பெற்றோர், இறந்த மகன் மீண்டும் வருவான் என்ற நம்பிக்கையில் அதை செய்தனர். சுமார் பத்து கிலோ உப்பு வாங்கி வந்து உடல் முழுவதும் போட்டு மூடப்பட்டது ஆறு மணி நேரம் காத்திருந்தோம் ஆனால் எதுவும் நடக்கவில்லை, இதனால் கிராம மக்கள் மருத்துவர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சிறுவன் உயிரிழந்துவிட்டதால் இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபடக்கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரை கூறினர். பின்னர் உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.