Asianet News TamilAsianet News Tamil

உயிருக்கு உயிரா லவ் பண்ணேன்.. நீ என்ன ஜெயிலுக்கு அனுப்பிட்டே.. தாய், மகளை வீடு புகுந்து வெட்டிய வக்கீல்.

ஒருதலை காதலில் ஈடுபட்டு வந்த இளம் வழக்கறிஞர் காதலியையும், அவரது  தாயாரையும் வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாக வெட்டியிள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I fell in love with you.. You sent me to jail.. Lawyer who hacked mother and daughter.
Author
First Published Sep 21, 2022, 5:59 PM IST

ஒருதலை காதலில் ஈடுபட்டு வந்த இளம் வழக்கறிஞர் காதலியையும், அவரது  தாயாரையும் வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாக வெட்டியிள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் டார்ச்சர் தாங்க முடியாமல் ஒருதலை காதலனை அப்பெண் சிறைக்கு அனுப்பிய நிலையில், வெளியில் வந்த காதலன் இவ்வாறு பழிக்கு பழி வாங்கியுள்ளார்.  

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும் காவல்துறை எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. காதலிப்பதாக நடித்து கற்பழித்து ஏமாற்றுவது. காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது,  ஒருதலை காதலில் ஈடுபட்டு பெண்களை வெட்டிக் கொலை செய்வது போன்ற கொடூரங்கள் அரங்கேறி வருகிறது.  இதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ சட்ட திட்டங்களை கொண்டு வந்தும் பலனில்லை, இந்த வரிசையில் ஒருதலை காதலன்  தன்னை உதாசீனப்படுத்திய காதலி மற்றும் அவரது தாயாரை வீடு புகுந்து வெட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

I fell in love with you.. You sent me to jail.. Lawyer who hacked mother and daughter.

இதையும் படியுங்கள்: ஒரே நேரத்தில் 2 பெண் போலீசை வளைத்துப்போட்டு உல்லாசம்.. காரில் கூட்டிச் சென்று மார்ப்பில் கத்தியால் குத்தி கொலை

முழு விவரம் பின்வருமாறு:- திருப்பூர் வெள்ளையன் காட்டை சேர்ந்தவர் ஜமினா பானு (42) இவர் மகிலா கோர்ட் அரசு சிறப்பு வழக்கறிஞராக உள்ளார், இவரது மகள் அமிர்நிஷா (20) சேலம் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் திருப்பூர் பெரிய தோட்டத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (25) என்பவர் சேலம் சட்டக் கல்லூரியில் படித்து பின் வழக்கறிஞராக திருப்பூரில் பயிற்சி பெற்று வருகிறார். அமிர்நிஷா தனது ஜூனியர் மாணவி என்பதால் அமிர்நிஷா மீது ரஹ்மானுக்கு காதல் ஏற்பட்டது. தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார், ஆனால் அமிர்நிஷா அதை பொருட்படுத்தவில்லை.

இதையும் படியுங்கள்: வீடு வீடாக சென்று ரகசிய கேமரா.. ஆன்டிகள், இளம்பெண்கள் குளிப்பதை அங்குலம் அங்குலமாக ரசித்த வாலிபர்கள்..!

இதனால் ஒரு கட்டத்தில் ரகுமானின் காதல் தொல்லை அதிகரித்தது, அது குறித்து அமிர்நிஷா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், அதுதொடர்பாக போலீசார் அப்துல் ரகுமானை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இது அப்துல் ரகுமானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது, சிறையிலிருந்து வந்ததும் அமிர்நிஷாவை பழித்தீர்க்க வேண்டும் என அவர் எத்தனித்தார். இந்நிலையில்தான் ஜாமீனில் வெளிவந்த வக்கில் ரஹ்மான், கடந்த 18ஆம் தேதி குமரன் ரோடு பின்னி காம்பவுண்ட் அருகில் உள்ள  அலுவலகத்தில் ஜமிலா பானு, காதலி அமிர்நிஷா இருப்பதை அறிந்து அங்கு சென்றார். 

I fell in love with you.. You sent me to jail.. Lawyer who hacked mother and daughter.

அப்போது இவரை பார்த்ததும் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு சாலைக்கு ஓடி வந்தனர், ஆனால் அவர்களை அங்கேயே வைத்து சரமாரியாக வெட்டினார், அதில் அவர்கள் படுகாயமடைந்தனர். பின்னர் அங்கிருந்து அவர் தப்பினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரஹ்மானை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. ரஹ்மானை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios