சென்னையில் பயங்கரம்.. 70 வயது கணவரை கொலை செய்து டிரம்மில் அடைத்து விட்டு 55 வயது மனைவி எஸ்கேப்..!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வளத்தி கோவிலான் (70). கூலி தொழிலாளி. இவரது மனைவி எழிலரசி(50). இவர் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். 

husband brutal murder... wife escape

செங்கல்பட்டில் கணவரை கொலை செய்துவிட்டு உடலை டிரம்மில் அடைத்து வைத்துவிட்டு தலைமறைவாக உள்ள மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வளத்தி கோவிலான் (70). கூலி தொழிலாளி. இவரது மனைவி எழிலரசி(50). இவர் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வளத்திகோவிலானிடம் வாடகை கேட்பதற்காக வீட்டின் உரிமையாளர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே  இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

இதையும் படிங்க;- இப்படி நடுரோட்டில் கேக் வெட்டினால் எப்படி போறது.. தட்டி கேட்ட ஆட்டோ ஓட்டுனர் படுகொலை.. நடந்தது என்ன?

இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சமையல் அறையில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மை திறந்து பார்த்த போது அதில் வளத்தி கோவிலான் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட அழுகிய நிலையில் இருந்தது. அவருடன் தங்கி இருந்த மனைவி எழிலரசி காணவில்லை. வளத்தி கோவிலானை மனைவி எழிலரசி கொலை செய்து விட்டு தப்பித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க;-  திண்டுக்கல்லில் பயங்கரம்.. திமுக நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

எழிலரசி மட்டும் இந்த கொலையை செய்து இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவருடன் வேறு யாரேனும் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்று தெரிகிறது. வீட்டில் ரத்தம் சிதறி கிடப்பதால் வளத்தி கோவிலானை கொடூரமாக வெட்டி கொன்று விட்டு உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி டிரம்மில் அடைத்து வைத்து விட்டு காதலனுடன் எழிலரசி தப்பி இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios