இப்படி நடுரோட்டில் கேக் வெட்டினால் எப்படி போறது.. தட்டி கேட்ட ஆட்டோ ஓட்டுனர் படுகொலை.. நடந்தது என்ன?
சென்னை அம்பத்தூரில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் காமேஷ் நடுரோட்டில் கேக் வெட்டி பிறநத்நாள் கொண்டாடினால் எப்படி ஆட்டோ செல்வது என கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
murder
இதனால், ஆத்திரமடைந்த அஜய்யின் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் காமேஷை தாக்கி, கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த சம்பவத்தை அறிந்து வந்த போலீசார் காமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Murder case
மேலும், காமேஷூடன் வந்த அவரது சகோதரர் சதீஷ் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள நபர்களை அம்பத்தூர் போலீசார் தேடி வருகின்றனர். நடு ரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.