ஏய்.. சரக்கு அடிக்க பணம் கொடுடி.. கொடுக்க மறுத்த மனைவியை அரிவாளால் கொடூரமாக வெட்டிய கணவர்..!

செல்வி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாதேஸ், அங்கு வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி செல்வியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

Husband arrested for cutting wife with sickle

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (45). இவரது மனைவி செல்வி (35). இவர்கள் தற்போது பரமத்திவேலூர் அடுத்த வேட்டுவங்காடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இரவு மனைவி செல்வியிடம் மாதேஸ் மது வாங்குவதற்காக பணம் கேட்டுள்ளார். 

இதையும் படிங்க;- 55 வயசுல கள்ளக்காதல் தேவையா? கைவிட மறுத்து நள்ளிரவில் ரோட்டில் மாமியார் செய்த காரியம்.. நேரில் பார்த்த மருமகன்

Husband arrested for cutting wife with sickle

அப்போது செல்வி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாதேஸ், அங்கு வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி செல்வியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு  பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;- கிஸ் அடித்து.. பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் பாதிரியார் வீடியோ வைரல்..!

Husband arrested for cutting wife with sickle

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாலி கட்டிய மனைவி குடிக்க பணம் தராததால் கணவர் அரிவாளால் வெட்டி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios