MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • 55 வயசுல கள்ளக்காதல் தேவையா? கைவிட மறுத்து நள்ளிரவில் ரோட்டில் மாமியார் செய்த காரியம்.. நேரில் பார்த்த மருமகன்

55 வயசுல கள்ளக்காதல் தேவையா? கைவிட மறுத்து நள்ளிரவில் ரோட்டில் மாமியார் செய்த காரியம்.. நேரில் பார்த்த மருமகன்

கள்ளக்காதலை கைவிட மறுத்த மாமியார் மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் ஆத்திரத்தில் மருமகன் டிராக்டர் ஏற்றிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 14 2023, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (55).  இவரது கணவர் ராதாகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தன் தங்கை சித்ராவின் மகள் சீதாவை வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தங்கை மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் (36) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். அன்பழகன் விவசாயம் செய்து கொண்டு கரும்பு டிராக்டர் ஓட்டி வந்தார். 

25

இந்நிலையில் அன்பழகனின் உறவினரான செல்லத்துரை (55) என்பவருடன் கொளஞ்சிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து கொண்டு கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். 

35

இதையறிந்த மருமகன் மாமியார் கொளஞ்சியை பலமுறை கண்டித்துள்ளார். இதனால், முருகேசனுக்கும், செல்லத்துரைக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால், மருமகன் சொல்வதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். 

45

இந்நிலையில், இரவு 11 மணிக்கு  வீட்டின் அருகே கொளஞ்சியமும், செல்லத்துரையும் பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த மருமகன் அன்பழகன் வீட்டிலிருந்த டிராக்டரை வேகமாக ஓட்டிச் சென்று இருவர் மீதும் ஏற்றியுள்ளார். இதில்,  கொளஞ்சியம், செல்லத்துரை இருவரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

55

இதனையடுத்து, நடந்த சம்பவத்தை கூறி டிராக்டருடன் அன்பழகன் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொளஞ்சியின் சொத்துக்கள் செல்லத்துரைக்கு சென்று விடும் என்பதால் இருவரையும் கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு குற்றச் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
Recommended image2
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
Recommended image3
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved