என்னை கட்டாயப்படுத்தி பலமுறை பலாத்காரம் செய்தார்.. என் சாவுக்கு அந்த பாஜக நிர்வாகி தான் காரணம்..!

னக்கும் பிரஜீவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. பலமுறை என்னை அவர் கட்டாயப்படுத்தி உடல் ரீதியாக பயன்படுத்தினார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. ஆனால் என்னை அவர் சமூகத்தில் தவறான பெண்ணாக சித்தரித்தார். 

He forced me and raped me several times...bjp female executive commits suicide

கேரளாவை சேர்ந்த பாஜக நிர்வாகி தன்னிடம் அத்துமீறியதாக மகளிர் அணி நிர்வாகி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சிஎன்புரம் நடுவாக்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி சரண்யா ரமேஷ் (27). இவர் பாலக்காடு சட்டமன்றத் தொகுதியின் மகளிரணி பொருளாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க;-மனைவியின் தங்கையுடன் கள்ளக்காதல்..ஹோட்டலில் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் !

He forced me and raped me several times...bjp female executive commits suicide

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரண்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரண்யா தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளார். 

இதையும் படிங்க;- ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!

He forced me and raped me several times...bjp female executive commits suicide

அந்தக் கடிதத்தில் பாலக்காட்டை சேர்ந்த பாஜக பிரமுகரான பிரஜீவ் என்பருடன் தொடர்பு இருந்தது குறித்து குறிப்பிட்டு இருந்தார். எனக்கும் பிரஜீவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. பலமுறை என்னை அவர் கட்டாயப்படுத்தி உடல் ரீதியாக பயன்படுத்தினார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. ஆனால் என்னை அவர் சமூகத்தில் தவறான பெண்ணாக சித்தரித்தார். என்னுடைய தற்கொலைக்கு பிரஜீவ் தான் காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பாலக்காடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios