மனைவியின் தங்கையுடன் கள்ளக்காதல்..ஹோட்டலில் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் !
ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கும் தமிழ்ச்செல்வி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று மகள்களும் உள்ளனர்.
தமிழ்ச்செல்விக்கு காந்திமதி என்ற தங்கை உள்ளார். சண்முகம், தமிழ்ச்செல்வி, காந்திமதி ஆகிய மூவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வருகின்றனர். பணி புரியும் இடத்தில சண்முகத்துக்கும் அவரது மனைவியின் தங்கை காந்திமதிக்கும் ரகசிய உறவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !
இந்த நிலையில் சண்முகமும் அவரது மனைவியின் தங்கை காந்திமதியும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அறை எடுத்து ஒரு நாள் முடிந்த நிலையிலும் அவர்கள் வெளியே வராததால் விடுதி காப்பாளருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் அறைக்கு சென்று கதவை தட்டி பார்த்துள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் ஜன்னலில் ஒட்டப்பட்டு இருந்த கருப்பு ஸ்டிக்கரை கிழித்து பார்த்த பொழுது காந்திமதியும், சண்முகமுகமும் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் தொடர்பாக போலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு அருகில் பீர் பாட்டில் மற்றும் எலி மருந்து ஆகியவை கிடந்துள்ளது. பின்னர் அவர்கள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலிஸார் அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் காதல் செய்த விவகாரம் வெளியே தெரிய வந்தால் அவமானம் ஆகிவிடும் என்பதால் தற்கொலை செய்து கொண்டதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையா? எ.வ வேலு காலேஜ்ல வைங்க பார்க்கலாம் - எச்.ராஜா கொந்தளிப்பு