மாணவிகள் பாத்ரூம் அருகே நின்று கொண்டு ஆபாச சைகை... டார்ச்சர் கொடுத்த டீச்சருக்கு சரியான ஆப்பு..!
சேலம் மாவட்டத்தை அடுத்த அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக சுரேஷ் பாபு பணியாற்றி வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
சேலத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியரை பெற்றோர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டத்தை அடுத்த அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக சுரேஷ் பாபு பணியாற்றி வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தினமும் குடித்துவிட்டு பள்ளிக்கு வரும் சுரேஷ் பாபு மாணவிகளின் கழிப்பிடம் அருகே நின்று ஆபாச சைகை காட்டுவதும், மாணவர்களை தன்னுடைய கால்களை பிடித்துவிட சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- என் புருஷன் உயிரோடு இருக்கும் வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது.. கணவரை கூலிப்படையை ஏவி போட்டு தள்ளிய மனைவி.!
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட போதும் இது குறித்து வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், பொறுமை இழந்த மாணவர்கள் பெற்றோரிடம் கூறியதை அடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சுரேஷ் பாபுவை முற்றுகையிட்டு ஆத்திரத்தில் தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் பள்ளிக்கு விரைந்து விசாரணை நடத்திய பிறகு சுரேஷ்பாபுவை போலீசார் கைது செய்தனர். அரசு பள்ளியில் ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க;- பீச்சில் உட்கார்ந்து கொண்டு காதலியிடம் ரொமன்ஸ்! திடீரென வந்த 3 பேர்! போலீசில் கதறிய காதலன்! நடந்தது என்ன?