முடி கொட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்த இளைஞர்.. மருத்துவர் தான் காரணம் - அதிர்ச்சி தகவல்!

முடி கொட்டியதால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Feeling desolated by hair fall youth hangs himself blames the doctor in a suicide note

கேரளா மாநிலம், கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்த பிரசாந்த் அக்டோபர் 1ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.  இது தொடர்பாக தற்கொலைக் கடிதம் கிடைத்த நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இளைஞன் உயிரிழந்தது குறித்து உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். தற்கொலைக் குறிப்பில் மருத்துவர் பெயர் இருந்தும், போலீசார் தீவிர விசாரணை நடத்தத் தயாராக இல்லை என்று உறவினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, பிரசாந்த் 2014 முதல் முடி கொட்டியதற்கு சிகிச்சை பெற்றார்.

Feeling desolated by hair fall youth hangs himself blames the doctor in a suicide note

இதையும் படிங்க.தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. எப்போது தேர்வு தெரியுமா ? முழு விபரம்

அந்த மருந்தை பயன்படுத்த ஆரம்பித்தால் முதலில் முடி முழுவதும் உதிர்ந்துவிடும்.  பிறகு நல்ல முடி கிடைக்கும் என்று பிரசாந்திடம் மருத்துவர் கூறினார். மருந்து சாப்பிட ஆரம்பித்தவுடனே முடி கொட்ட ஆரம்பித்தது. தலையில் மட்டுமல்லாமல், கை, புருவங்களிலும் முடி உதிர ஆரம்பித்ததால் தான் அதிர்ச்சியடைந்த இளைஞர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

பிரசாந்தின் தற்கொலைக் கடிதத்தில் இவை கூறப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளார்கள்.பிரசாந்த் எழுதி வைத்துள்ள தற்கொலைக் குறிப்பில், கை, புருவங்களில் முடி உதிர்வதைக் கண்டு சகிக்க முடியாமல் வெளியே சென்று மக்களை எதிர்கொள்ள சிரமப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பிரசாந்த் மரணம் தொடர்பாக மருத்துவர் மீது குடும்பத்தினர் புகார் அளித்தும்  இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Feeling desolated by hair fall youth hangs himself blames the doctor in a suicide note

முதற்கட்ட விசாரணையில் மருத்துவர் தவறிழைத்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். முடி கொட்டியதற்கு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு.. சிலை கடத்தல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் !!

இதையும் படிங்க.கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது தெரியுமா ? நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios