தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. எப்போது தேர்வு தெரியுமா ? முழு விபரம்
10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
2022- 23ஆம் கல்வியாண்டிற்கான 10. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
பொதுவாகவே 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும். அதற்கான கால அட்டவணை முன்கூட்டியே பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும். அதற்கேற்ப மாணவர்களும் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வர்.
இந்த நிலையில் இன்று 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - 13.03.23 முதல் 3.4.23 வரையிலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு -14.3.23 முதல் 5.4.23 வரையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 6.4.23 முதல் 20.4.23 வரையிலும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுதவுள்ளனர். 3,986 மையங்களில் தேர்வு நடைபெறும்.
ஏப்ரல் 6 - தமிழ்
ஏப்ரல் 10- ஆங்கிலம்
ஏப்ரல் 13 - கணக்கு
ஏப்ரல் 17 -அறிவியல்
ஏப்ரல் 20 - சமூக அறிவியல்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி தேதியன்று முடிவடையும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்பு தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுத்தவுள்ளனர். 3,169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
மார்ச் 13 - தமிழ்
மார்ச் 15 ஆங்கிலம்
மார்ச் 17- கணினி அறிவியல், உயிரி வேதியல், மனையியல்
மார்ச் 21 இயற்பியல், பொருளியல்
மார்ச் 27 - கணிதவியல், விலங்கியல், வணிகவியல்
ஏப்ரல் 3 - வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல் தேர்வு நடைபெறும்.
இதையும் படிங்க.12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !
இதையும் படிங்க.விண்ணப்பித்துவிட்டீர்களா.? ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் !!