மதுரை மாவட்டம் அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவர் தனது உறவினரான மணி என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். 

மகளின் காதலனை நடுரோட்டில் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக தந்தை மற்றும் அண்ணன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவர் தனது உறவினரான மணி என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அப்படி இருந்த போதிலும் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இதனால், பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். 

இதையும் படிங்க: அடிப்பாவி.. நீ தாயா இல்ல பேயா? கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க பெற்ற குழந்தைகளை கொலை செய்த கொடூரம்!

இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே வந்த கார்த்திக்கை, காதலியின் தந்தை மணி மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலாதேவியை நினைவிருக்கா? தீர்ப்புக்கு தேதி குறித்த நீதிமன்றம்!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் காதலனை நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.