தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குடிபோதையில் இருந்த தந்தை மகனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சொசைட்டி தெருவில் வசித்து வருபவர் ரெங்கன் (வயது 56). இவருக்கு மணிகண்டன் (33), பாண்டி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.. இதில் மூத்த மகன் மணிகண்டன் தேங்காய் உரிக்கும் கூலிவேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவனை பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜல்லிக்கட்டு சர்வதேச விளையாட்டாக அங்கீகாரம் பெறவேண்டும்; இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான் விருப்பம்

இந்நிலையில் தனது தந்தை ரங்கனுடன் மணிகண்டன் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ரங்கன் குடிபோதையில் தனது வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்கு வந்த ரங்கன் தனது மகன் மணிகண்டனுடன் மது போதையில் வாய்தகராறில் ஈடுபட்டு உள்ளார். இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் ரெங்கன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து யாரும் எதிர்பாராத நிலையில் மகன் மணிகண்டனை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து மணிகண்டன் பலியானார்.

நீலகிரியில் யானை பொங்கல் விழா கோலாகலம்; உறியடித்து மகிழ்ந்த ஆட்சியர் அருணா

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னமனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சொந்த மகனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ரங்கனை சீலையம்பட்டி ஆற்றுப்பாலத்தில் சின்னமனூர் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.