மதுவுக்கு அடிமையான கோவிந்தன் தினமும் குடித்துவிட்டு மனைவி ராதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல நேற்று இரவும் மீண்டும் கோவிந்தன் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். 

மதுபோதையில் மனைவியின் தலையில் கல்லை போட்டு துடிதுடிக்க கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (39). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா (33). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதா குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டு தனது குடும்பத்துடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இதையும் படிங்க;- 28 வயது இளம்பெண் குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 15 வயது சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

இந்நிலையில், மதுவுக்கு அடிமையான கோவிந்தன் தினமும் குடித்துவிட்டு மனைவி ராதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல நேற்று இரவும் மீண்டும் கோவிந்தன் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கோவிந்தன் அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து ராதா தலையில் போட்டுள்ளார். 

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராதா அலறியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த ராதாவை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- இரண்டு திருமணத்தை மறைத்து 3வது திருமணம்.. 52 வயது பாஜக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய போலீஸ்.!

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோவிந்தனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.