என்ன பார்த்ததும் பேசிட்டிருந்த போனை எதுக்கு கட் பண்ண! காதல் மனைவி மீது தீராத சந்தேகம்!இறுதியில் நடந்த பயங்கரம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள நாடார் தெருவை சேர்ந்தவர் அரபு அலி (30). இவர் அப்பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிலட்சுமி (எ) ஜாஸ்மினை (25) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
 

Doubtful of behavior.. Love wife stabbed.. husband absconding tvk

நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் திருமணம் செய்த மனைவியை கணவர் கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள நாடார் தெருவை சேர்ந்தவர் அரபு அலி (30). இவர் அப்பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிலட்சுமி (எ) ஜாஸ்மினை (25) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இதையும் படிங்க: தலைமை ஆசிரியர் செய்கிற வேலையா இது.. பள்ளி சிறுமிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை..!

இந்நிலையில் மனைவி நடத்தையில் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அரபு அலி வீட்டிற்கு வந்தபோது ஜாஸ்மின் செல்போனில் பேசி கொண்டிருந்தார். கணவர் வருவதை பார்த்ததும் செல்போன் இணைப்பை உடனே துண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:  செம்பரம்பாக்கம் ஏரியில் தலை இல்லாமல் 6 துண்டுகலாக மிதந்த உடல்கள்! கொலை செய்யப்பட்டது யார்? வெளியான பகீர் தகவல்

அப்போது ஆத்திரமடைந்த அரபு அலி, வீட்டில் இருந்த கறி வெட்டும் கத்தியால் மனைவியின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். ஜாஸ்மின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரபு அலியை தேடி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios