செம்பரம்பாக்கம் ஏரியில் தலை இல்லாமல் 6 துண்டுகலாக மிதந்த உடல்கள்! கொலை செய்யப்பட்டது யார்? வெளியான பகீர் தகவல்
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் சிறுகளத்தூர் அருகே கடந்த மாதம் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் கிடப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் 6 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் சிறுகளத்தூர் அருகே கடந்த மாதம் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் கிடப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலை கிடைக்காத நிலையில் கொலை செய்யப்பட்டவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: கள்ளக்காதல் விவகாரம்... தலையில் கல்லைப் போட்டு வாலிபர் படுகொலை..!
அதில், கடலூரை சேர்ந்த பூமிநாதன் (40) என்பதும், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்: கடலூரை சேர்ந்த பூமிநாதன் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னை வந்துள்ளார். பின்னர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அப்போது, அங்கு தன்னுடன் பணிபுரிந்த பெண் காவலாளி நாகலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும், நாகலட்சுமி பிலிப்ஸ் என்ற வாலிபருடனும் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த விஷயம் பிலிப்ஸூக்கு தெரியவந்ததை அடுத்து நாகலட்சுமியை எச்சரித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் நாகலட்சுமி பிலிப்ஸூக்கு தெரியாமல் பூமிநாதனுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த பிலிப்ஸ், பூமிநாதனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த மாதம் தனது நண்பர் வினோத் என்பவர் மூலம் பூமிநாதனிடம் நைசாக பேசி செம்பரம்பாக்கம் ஏரிக்கரைக்கு அழைத்து, மது ஊற்றிக்கொடுத்து போதை தலைக்கு ஏறியதும் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பூமிநாதனை சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
பின்னர், அவரது உடலில் இருந்து தலை, கை, கால்கள் ஆகியவற்றை வெட்டி எடுத்து, உடலை மட்டும் கல்லை கட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் வீசினர். பின்னர் தலையை மட்டும் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை வண்டலூர் பகுதியில் உள்ள ஏரியில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வினோத் மற்றும் பிலிப்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.