கள்ளக்காதல் விவகாரம்... தலையில் கல்லைப் போட்டு வாலிபர் படுகொலை..!
கர்நாடகா மாநிலம் ஹூப்ளி சாலையில் பகுதியில் பாதி எரிந்த நிலையில் வாலிபர் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளி சாலையில் பகுதியில் பாதி எரிந்த நிலையில் வாலிபர் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முதலில் கல்லைப் போட்டு கொடூரமாக வாலிபர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், மாருதி நகரைச் சேர்ந்த விஜய பசவன்(25) என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடுப்பான தம்பி! காதலன் தலையை தனியாக துண்டித்து.. அக்கா கழுத்தறுத்து படுகொலை! நடந்தது என்ன?