விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடையானம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி ராக்கம்மாள்(52). திமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்தார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். 

விருதுநகர் அருகே திமுக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடையானம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி ராக்கம்மாள்(52). திமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்தார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் சோலைமணிக்கும் மூர்த்தி என்பவருக்கும் ராகம்மாள் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தி சோலைமணியை பிரிந்து சென்றுவிட்டார்.

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சார தொழில்.. ஆண்களை சூடு ஏத்தும் பெண்களின் லீலை..!

மருமகன் வெறிச்செயல்

இதற்கு மாமியார் ராக்கம்மாள் தான் காரணம் என நினைத்த மூர்த்தி நேற்று மாலை அவரது வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ராக்கம்மாளை சரமாரியாக குத்தியால் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

திமுக பெண் நிர்வாகி குடும்ப பிரச்சனையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.