சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கவுசல்யா.  இவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தோழியை பார்க்க சாதாரண உடையில் சென்றதாக கூறப்படுகிறது. பிறகு தோழியுடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டனர். அப்போது அதே ஓட்டலில் போதையில் இருந்த 3 வாலிபர்கள், கவுசல்யாவை பார்த்து கிண்டல் செய்து தகாத முறையில் சைகை காட்டியதாக கூறப்படுகிறது. 

மப்டியில் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற பெண் உதவி ஆய்வாளரிடம் ஆபாச சைகை காட்டி ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெண் எஸ்.ஐ.யிடம் ரகளை

சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கவுசல்யா. இவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தோழியை பார்க்க சாதாரண உடையில் சென்றதாக கூறப்படுகிறது. பிறகு தோழியுடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டனர். அப்போது அதே ஓட்டலில் போதையில் இருந்த 3 வாலிபர்கள், கவுசல்யாவை பார்த்து கிண்டல் செய்து தகாத முறையில் சைகை காட்டியதாக கூறப்படுகிறது. 

புகார்

இதுகுறித்து கவுசல்யா நான் உதவி ஆய்வாளர் என்று கூறி அவர்களை எச்சரித்துள்ளார். ஆனால், 3 போதை வாலிபர்களும், யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறி தொடர்ந்து கவுசல்யாவை பார்த்து ஆபாசமாக பேசி வந்துள்ளனர். இதையடுத்து உதவி ஆய்வாளர் கவுசல்யா சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

3 பேர் கைது

அதன்படி விரைந்து வந்த போலீசார், போதையில் பெண் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து ஆபாச சைகை செய்த 3 போதை வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தேனாம்பேட்டையை சேர்ந்த செல்வகுமார் (26), நரேஷ் (32), விக்னேஷ் (28) உள்ளிட்ட 3 பேரை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க;- என்னை விட்ருங்க ப்ளீஸ்.. எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் காதலன் கண்முன்னே காதலி கதற கதற கூட்டு பலாத்காரம்.!