2 லட்சம் பேரிடம் 15,000 கோடி அபேஸ்! மெகா பைக் பாட் மோசடியில் முக்கிய குற்றவாளியை பிடிப்பவருக்கு ரூ.5 லட்சம்!

பைக் பாட் மோசடி மூலம் 2 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.15 ஆயிரம் கோடி முறைகேடு செய்த முக்கியக் குற்றவாளி தீப்தி பாஹல் என்ற பெண் 2019 முதல் தலைமறைவாக உள்ளார்.

Deepti Bahal: Ex-principal now UP's most wanted woman criminal in Bike bot scam

பாக்பத்தில் உள்ள ஒரு கல்லூரியின் முதல்வராக இருந்த தீப்தி பாஹல் இன்று மூன்று வெவ்வேறு புலனாய்வு அமைப்புகளால் தேடப்படும் குற்றவாளியாக மாறியிருக்கிறார். அவரைப் பிடித்துக் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லோனியில் வசித்து வந்த தீப்தி, பைக் பாட் மோசடியில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர். இவர் பைக் டாக்சி முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட சஞ்சய் பதி மனைவி. நாடு முழுவதும் பல மாநிலங்களில் இந்த மோசடி தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சிபிஐ, அமலாக்கத்துறை, பொருளதாரக் குற்றப்பிரிவு என பல புலனாய்வு அமைப்புகள் இந்த மோசடி பற்றி விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கை விசாரித்து வரும் மீரட் பொருளாதார குற்றப்பிரிவு, நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் ரூ.4,500 கோடி முறைகேடு நடந்துள்ளதாவும் கூறுகிறது. சிபிஐ விசாரணையில் 15,000 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் 40 வயது பெண்ணான தீப்தி பாஹல் மீது 2019ஆம் ஆண்டு முதல் முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமுதல் இவர் தலைமறைவாக இருந்துவருகிறார். அவர் அப்போதே வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

 

தர்ஷன் மேத்தாவைத் தெரியுமா? 2007 முதல் அம்பானி நிறுவனத்தின் விசுவாசி!

 

தீப்தியின் கணவர் சஞ்சய் பாட்டி கார்விட் இன்னோவேட்டிவ் புரொமோட்டர்ஸ் லிமிடெட் என்ற (Garvit Innovative Promoters Limited)(GIPL) என்ற பெயரில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் நொய்டாவில் இருந்து, செயல்பட்டு வந்தது. 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சஞ்சய் பாடி தனது நிறுவனம் மூலம் 'பைக் பாட் - பைக் டாக்ஸி' திட்டத்தை அறிவித்தார். அப்போது, தன் மனைவி தீப்தி பாஹலை நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக நியமித்தார் என்று உ.பி. போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

நீதிமன்ற விசாரணையின்போது, தீப்தியின் வழக்கறிஞர், அவர் நிறுவனத்தின் பொறுப்பில் செயல்படவில்லை என்றும் அதனால் பிப்ரவரி 14, 2017 அன்று நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்ததாகவும் கூறினார். பைக் பாட் மோசடி தொடர்பான அனைத்து வழக்குகளிலும் தீப்தியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

சஞ்சய் பாட்டியுடன் திருமணம் ஆவதற்கு முன் பாக்பத்தில் உள்ள கல்லூரியில் ஆசிரியராக இருந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. barautcollegeofeducation.org என்ற பாக்பத் கல்வியியல் கல்லூரியின் இணையதளத்தில் தீப்தியை கல்லூரி முதல்வராக இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் எம்ஏ மற்றும் பிஎச்டி பட்டம் பெற்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்லூரி சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

Deepti Bahal: Ex-principal now UP's most wanted woman criminal in Bike bot scam

கடல்மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பு: ஐ.நா. காலநிலை அறிக்கையில் எச்சரிக்கை

2017ஆம் ஆண்டு கார்விட் நிறுவனத்தின் பெயரில் வெளியான 'பைக் பாட் பைக் டாக்சி' திட்டத்தில், பைக் டாக்ஸியாக பயன்படுத்தப்படும் பைக்குகள் மீது முதலீட்டாளர்கள் பணம் செலுத்த முதலீடு செய்ய வேண்டும் எனவும் அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

ஒவ்வொரு முதலீட்டாளரும் ஒரு பைக்கிற்கு ரூ.62,100 செலுத்த வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.17 லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் தங்கள் விரும்பம் போல ஒன்றுக்கு மேற்பட்ட எத்தனை பைக்குகளிலும் முதலீடு செய்யலாம் எனவும் சொல்லப்பட்டது.

முதல் முறையாக தீப்தியைப் பிடித்துக்க கொடுப்பவருக்கு ரூ.50,000 பரிசு வழங்குவதாக 2020 இல் பொருளாதாரக் குற்றப்பிரிவு அறிவித்தது. மார்ச் 2021 இல், லோனியில் உள்ள அவரது இல்லம் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. முன்னதாக, மீரட்டில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்தபோது, அவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறியதைக் கண்டுபிடிக்கப்பட்டது.

 

காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் கைது! அசாம் சிறையில் அடைக்க ஏற்பாடு!

 

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த ஊழல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து உத்தரவு பிறப்பித்தது. தீப்தி நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருப்பதால் தீப்தி மற்றும் மற்றொரு முக்கியக் குற்றவாளியான பூதேவ் சிங் ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

நொய்டாவில் பதிவு செய்யப்பட்ட 118 வழக்குகளிலும் தீப்தியின் பெயரில் குற்றச்சாட்டு உள்ளது. நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட வழக்குகளிலும் தீப்தியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பணமோசடிக்கு துணைபோன 31 பேர் மற்றும் 13 நிறுவனங்களின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இருக்கின்றன. இதுவரை, கார்விட் இன்னோவேட்டர்ஸ் நிறுனவத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர், ஃபார்ச்சூனர் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரூ.216 கோடி மதிப்புள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிபிஐ விசாரணையில் சுமார் 2 லட்சம் முதலீட்டாளர்கள் இந்த பைக் பாட் மோசடியில் பணத்தை இழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை இந்தத் திட்டம் நடைமுறையில் நீடித்ததாகவும் தெரிகிறது. நவம்பர் 2018 இல், நிறுவனம் இ-பைக்குகளுக்கான மற்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கான முதலீட்டுத் தொகை பெட்ரோல் பைக்குகளுக்கான முதலீட்டுத் தொகையைவிட இருமடங்காக இருந்தது.

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி கொடூரக் கொலை! 4 ஆண்டு லிவ் இன் வாழ்க்கையில் நேர்ந்த துயரம்!

2019ஆம் ஆண்டில் இத்திட்டத்தில் முதலீடு செய்த கிட்டத்தட்ட 2 லட்சம் முதலீட்டாளர்கள், தங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட தொகை கிடைக்காத நிலையில், சஞ்சய் பாட்டி மற்றும் அவரது நிறுவனத்திற்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் நொய்டாவில் உள்ள அதிகாரிகளின் பங்கு குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. "...இந்த மோசடி புகார்கள் பற்றி நொய்டா மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்தாலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, புகார்தாரர்கள் தங்கள் புகார்களை திரும்பப் பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்” என சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

பின்னர், இந்த மோசடி தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் பண மோசடி வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. கார்விட் நிறுவனத்தைத் தொடங்கிய சஞ்சய் பாட்டி மற்றும் பலர் மீது தாத்ரி காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் 2019 இல் சூரஜ்பூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் சஞ்சய் பாட்டி சரணடைந்தார்.

ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை! அறநிலையத்துறையில் அற்புதமான வாய்ப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios