பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்கேன் செய்து கருவில் பெண் குழந்தை இருப்பதாக கூறி, சட்டவிரோதமாக கருகலைப்பு செய்த பெண், அதீத ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மருந்த உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர். 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்கேன் செய்து கருவில் பெண் குழந்தை இருப்பதாக கூறி, சட்டவிரோதமாக கருகலைப்பு செய்த பெண், அதீத ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மருந்த உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் - அனிதா தம்பதியினர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அனிதா மூன்றாவது கர்ப்பம் ஆகியுள்ளார். இதனால் வேல்முருகன், ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை அறிந்துக் கொள்ள தனது மனைவி அனிதாவை அழைத்துக்கொண்டு கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள கச்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் நடத்தும் மருந்தகத்துக்கு சென்றுள்ளனர்.

மேலும் படிக்க: பீக் ஹவரில் பயங்கர துப்பாக்கி சூடு.. அலறிய டெல்லி... பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

அந்த மருந்தகத்தில் முருகன், மறைமுகமாக ஸ்கேன் மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்று சோதனை செய்ததில், கருவில் இருப்பது பெண் பாலினம் என அறிந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த சிசுவை கலைத்து விடும்படி கணவன் வேல்முருகன், முருகனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 5 ஆம் தேதி அனிதாவிற்கு , தனது மருந்தகத்தில் கருகலைப்பு செய்துள்ளார் முருகன். 

ஆனால் அன்று வீடு திரும்பிய அனிதாவிற்கு திடீரென்று, அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிபோன வேல்முருகன், அனிதாவை அழைத்து, மீண்டும் ராமநத்ததில் உள்ள மருந்தகத்துக்கு சென்றுள்ளனர். அவரை சோதித்த மருந்தக உரிமையாளர் முருகன், தனது காரில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனிதாவை அழைத்து வந்துள்ளார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அனிதாவை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அதன் பின்னர் மருந்தக உரிமையாளர் அங்கிருந்து தப்பியோடியதாக சொல்லபடுகிறது. பின்னர் சற்று நேரத்திலே அனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீஸார் வழக்குப்பதிவு மருந்தக உரிமையாளர் முருகனை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: சென்னையை உலுக்கிய தம்பதி படுகொலை..ஓட்டுநரே கொலை செய்த பயங்கரம்..போலீஸ் எடுத்த அதிரடி ஆக்சன்!