இது புளிக்குழம்பா எலிக்குழம்பா! உ.பி. மருத்துவக் கல்லூரி உணவில் செத்துக் கிடந்த எலி!

உ.பி.யில் உள்ள மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட்ட உணவில் எலி செத்துக் கிடந்திருக்கிறது. ஆனால், இந்தச் சம்பவம் எப்போது நடைபெற்றது என்ற விவரம் தெரியவரவில்லை.

Dead Rat Found In Food Served At Hapur's Rama Medical College, Video Goes Viral

உத்தர பிரதேசத்தில் ஒரு கல்லூரியில் வழங்கப்பட்ட சாப்பாட்டில் குழம்பில் முழு எலி ஒன்று கிடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் நகரில் ரமா மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்காக மதி உணவு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. சாதம், சாம்பார், புளி குழம்பு போன்றவை பரிமாறப்பட்டுள்ளன. அதில், புளி குழம்பில் செத்த எலி கிடப்பது தெரியவந்தது.

எலி கிடப்பதைக் கண்ட ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குழம்பில் காய்கறி அதிகம் இல்லாத நிலையில், செத்த எலி முழுமையாக கிடந்தது வீடியோவைப் பார்த்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டெல்லியில் கொட்டிய மழை... ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி

இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. வீடியோவிலும் அது எடுக்கப்பட்ட தேதி காணப்படவில்லை. இந்த வீடியோ வெளியான பின்பும் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

சில நாட்களுக்கு முன், சீனாவின் உள்ள ஒரு கல்லூரி கேண்டீனில் வாத்து இறைச்சியில் எலித் தலை கிடைந்தது செய்திகளில் இடம்பெற்றது நினைவுகூரத்தக்கது. பிரிட்டனில் உள்ள கேஎஃப்சி உணவகம் ஒன்றில் ஒரு பெண்ணுக்கு துண்டிக்கப்பட்ட கோழித் தலையுடன் உணவு வழங்கப்பட்டது.

Video: ஹாலிவுட் சாகசக் காட்சிகளை மிஞ்சும் சம்பவம்! வெள்ளத்தில் காரில் சிக்கியவர் பத்திரமாக மீட்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios