டெல்லியில் கொட்டிய மழை... ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி
மின்கம்பத்தின் அடிப்பகுதியில் மின்சார கம்பிகள் அபாயகரமான நிலையில் இருந்தது விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை இரவு முதல் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, டெல்லி ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று ஒரு பெண் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கிழக்கு டெல்லியில் உள்ள ப்ரீத் விஹாரில் வசிக்கும் சாக்ஷி அஹுஜா, இரண்டு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அதிகாலை 5:30 மணியளவில் ரயில் நிலையத்தை அடைந்தார். அங்கு தேங்கி இருந்த தண்ணீரை மிதிக்காமல் செல்வதற்காக, அருகில் இருந்த மின்கம்பத்தைப் பிடித்துள்ளார். அப்போது, அந்தப் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
Video: ஹாலிவுட் சாகசக் காட்சிகளை மிஞ்சும் சம்பவம்! வெள்ளத்தில் காரில் சிக்கியவர் பத்திரமாக மீட்பு
அங்கிருந்தவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். ரயில் நிலையத்தின் வெளியேறும் முதல் வாயிலுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மின்கம்பத்தில் வயர்கள் வெளியே தெரியும் விதமாக அபாயகரமாக இருப்பதைக் கண்டுகொள்ளாத அதிகாரிகளின் அலட்சியம் தான் தன் சாக்ஷியின் இறப்புக்குக்க காரணம் என்று பலியான பெண்ணின் சகோதரி மாத்வி சோப்ரா மற்றும் தந்தை லோகேஷ் குமார் சோப்ரா ஆகியோர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"நாங்கள் சண்டிகருக்குச் சென்றுகொண்டிருந்தோம். எனது மகள் சாக்ஷி அஹுஜா மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தபோது நான் வாகன நிறுத்துமிடத்தில் இருந்தேன். அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இது நடந்துள்ளது" என்று லோகேஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
மூட நம்பிக்கையை உடைக்கும் சித்தராமையா! சட்டப்பேரவையில் வாஸ்துவால் அடைக்கப்பட்ட கதவுகள் திறப்பு!