சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை துண்டிப்பு... சிதறி கிடந்த பூஜை பொருட்களால் பரபரப்பு..!
கடந்த 5ம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பழுதாகி நின்றிருந்த மின்கம்பம் சிறுமி மீது சாய்ந்தது. இதில், படுகாயமடைந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
செங்கல்பட்டு பகுதியில் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீகம் செய்பவர்களின் கைவரிசையா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்துக்கு அருகிலுள்ள சித்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா(11). அதேத பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்த வந்தாள். இவள் கடந்த 5ம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பழுதாகி நின்றிருந்த மின்கம்பம் சிறுமி மீது சாய்ந்தது. இதில், படுகாயமடைந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது.
இதையும் படிங்க;- மேட்டூரில் பயங்கரம்.. அரசு மருத்துவமனையில் புகுந்து ரவுடி தலை துண்டிப்பு.. பகீர் சிசிடிவி காட்சி.!
இந்நிலையில், கடந்த 14ம் தேதி சிகிச்சை பலனின்றி சிறுமி கிருத்திகா உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை நிறைவடைந்து சிறுமியின் உடல் கடந்த 15-ம் தேதி சித்திரவாடி பகுதி சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. ஆனால், புதைக்கப்பட்டிருந்த சிறுமி உடல் தோண்டி இருந்தது. அருகில் சிறுமியின் தலைமுடி, எலுமிச்சை பழம், மஞ்சள் தூள், குங்குமம் போன்ற பூஜை பொருட்களும் மற்றும் டார்ச் லைட் இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மற்றும் மருத்துவர்கள் விரைந்து சிறுமி புதைக்கப்பட்ட இடம் தோண்டினர். அதில், சிறுமியின் உடலில் தலையை யாரோ வெட்டி எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியின் உடல் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சிறுமியின் தலையை எடுத்துச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாந்திரீக பூஜைக்காக தோண்டப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க;- ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர ரூம் போட்டு உல்லாசம்.. வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.. கதறும் இளம்பெண்.!