மேட்டூரில் பயங்கரம்.. அரசு மருத்துவமனையில் புகுந்து ரவுடி தலை துண்டிப்பு.. பகீர் சிசிடிவி காட்சி.!
ரகுநாதனும், அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி வெள்ளையன் (எ) மாரிகவுண்டனும் நண்பர்கள். இருவரும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2019ல் ரகுநாதன் தொட்டில்பட்டியில் உள்ள வேறு ஒரு குழுவில் சேர்ந்துள்ளார்.
மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் ரகு (எ) ரகுநாதன் (22). பிரபல ரவுடியான இவர் பெயின்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ரகுநாதனும், அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி வெள்ளையன் (எ) மாரிகவுண்டனும் நண்பர்கள். இருவரும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2019ல் ரகுநாதன் தொட்டில்பட்டியில் உள்ள வேறு ஒரு குழுவில் சேர்ந்துள்ளார்.
இதனால், அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், வெள்ளையன் கூட்டாளிகளுடன் ரகுநாதனின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், ரகுநாதனை வெள்ளையன் தரப்பினர் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனையடுத்து, சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனையறிந்த வெள்ளையன், மூர்த்தி(36), பிரகாஷ்(30) மற்றும் சிலருடன் அரசு மருத்துவமனைக்கு நுழைந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரகுநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதனை பார்த்து செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். இதில், வெள்ளையன், மூர்த்தி ஆகியோரை போலீசார் துரத்தியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.