அக்கா மகள் துடிதுடிக்க கொலை.. எஸ்கேப்பான தாய் மாமன் சிக்கினார்.. நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா(18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

College student killed... uncle arrested in tirupattur tvk

கல்லூரி மாணவியை தனியே அழைத்து சென்று கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தாய்மாமாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா(18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ஜீவிதாவின் தாயின் தம்பியான சரண்ராஜ் (35) கடந்த 4 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- திருவண்ணாமலை அருகே கோர விபத்து... லாரி - கார் நேருக்கு மோதல்.. 8 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஆனால், இவரது காதலை ஜீவிதா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ் ஜீவிதாவை நைசாக பேசி தனியாக அழைத்து சென்று கழுத்தறுத்து விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;-  பால் கொடுக்க வந்த இடத்தில் ஆன்டியை கரெக்ட் செய்து உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்தது என்ன?

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடி தாய் மாமாவை தேடிவந்தனர். இந்நிலையில், நிலக்கல் நத்தம் பகுதியில் பதுங்கி இருந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios