பால் கொடுக்க வந்த இடத்தில் ஆன்டியை கரெக்ட் செய்து உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்தது என்ன?
கள்ளக்காதல் விவகாரத்தில் டீ மாஸ்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மனைவி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன் (41). டீ மாஸ்டர். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகனும் உள்ளனர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மாரியப்பன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவர் புளியங்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவ்வழியாக சென்ற கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர். இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து, வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(24) என்பவரிடம் விசாரணை நடத்தியதில் மாரியப்பனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு விக்னேஷ் பால் விற்பனை செய்து வந்தார். அப்போது அவருக்கும் மாரியப்பனின் மனைவி கனகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தினமும் மாரியப்பன் அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் உல்லாசமாக இருந்ததை மாரியப்பன் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்த இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலனை பார்க்க முடியாத ஏக்கத்தில் கனகா இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்துவிடுமாறு செல்போனில் விக்னேஷிடம் கனகா கூறியுள்ளார். அதன்படி நேற்று அதிகாலையில் மாரியப்பன் வேலைக்கு சென்ற நேரத்தில் வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விக்கேஷ் மற்றும் கனகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.