சென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு 3-வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த காமக்கொடூரனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். 

சென்னை மதுரவாயிலில் வடமாநிலத்தை சேர்ந்த சீனிவாசன் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பானிப்பூரி கடை வைத்திருக்கிறார். இந்நிலையில், வழக்கம்போல சீனிவாசன் குடும்பத்தினர் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது. 10 வயது சிறுமி சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். 

மேலும் படிக்க;- கொழுந்தனுடன் அண்ணி அடிக்கடி உல்லாசம்... நேரில் பார்த்த அண்ணன்... கதற கதற நடத்திய சம்பவம்..!

அந்த சமயம் அப்பகுதியில் வசிக்கக்கூடிய சுரேஷ் என்ற வாலிபர் குடிபோதையில் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் உடலை 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். ஆனால், சிறுநீர் கழிக்க சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வராததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தில் விசாரித்தும் மகள் கிடைக்கவில்லை. இதனால், சிறுமியின் பெற்றோர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர். அப்போது, அவர்கள் வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் சிறுமி கீழே விழுந்து மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அச்சிறுமியை மீட்டு போலீசார் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறியதை கண்டு பெற்றோர் மற்றும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் படிக்க;-  பலான இடத்தில் கை வைத்து மகளுக்கு பாலியல் தொல்லை.. பள்ளியில் வைத்து எட்டி எட்டி உதைத்து செருப்படி கொடுத்த தாய்

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சென்ட்ரிங் தொழிலாளியான சுரேஷ் என்பவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பலாத்காரம் செய்துவிட்டு குழந்தையை தூக்கி வீசி கொலை செய்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.